சனி, 6 நவம்பர், 2010

தீபாவளி கவிதைகள்

ஹைய்யா! தீபாவளி!

ஆண்கள் தோன்றி மிரட்டும்
நகை கடை விளம்பரங்கள்!
பெண்கள் படி ஆடும்
புடவை அறிமுகங்கள் !
வான் அலைகளில் வசிகரக் குரலில்
ஆசை வலை விரிப்புக்கள் !
முடிந்தவரை மொட்டை அடிக்கும்
மொக்கை போட்டிகள்!
ஓன்று வாங்கினால் ஓன்று இலவசம்
என்ற தூண்டில் இரைகள்!
பொடிப் பொடியாய் வெடித்துச் சிதறும்
வெடிகளில் கூட நடிகைகள் சிரித்தபடியே!
அப்பாவி பொதுஜனம் வாழ்க்கை மட்டும்
கேள்விக்குறியாய் வளைந்தபடியே!