மழை!
மேகங்கள் கீழிறங்கி தெருக்களில் நடக்கின்றன!
மரங்கள் தலையசைத்து வரவேற்கின்றன!
வீட்டு ஜன்னலின் திரை சீலைகள்
ஈரக்காற்றில் படபடத்து சிரிக்கின்றன!
இடியோசை கேட்டு பயந்துபோய்
தள்ளாடும் தென்னைகள்,
தேங்காய்கள் உதிர்க்கின்றன.
திடுக்கிட்டு விழிக்கிறேன் நான்!
எல்லாம் வெறும் கனவு!
மரங்களை அழித்து மனைகள் கட்டும்
வியாபாரிகள் பூமியில்
மழை இனிமேல் வெறும் கனவே!