செவ்வாய், 6 அக்டோபர், 2009

பூமியை கொஞ்சம் மாற்று!

பூமியைக் கொஞ்சம் மாற்று!!
குழந்தையும் தெய்வமும்குணத்தால் ஒன்று தானேபிஞ்சு மனதில் ஏது வஞ்சம்!
உன்னிடத்தில் இல்லை லஞ்சம்!!
பொய்யும் புரட்டும்மனிதரிடைமட்டும்தான்
உனக்கு இன்னும் கற்பிக்கப்படவில்லை!
அதனால்தான்உன் புன்னகைதெய்வீகமாய் இருக்கிறது!!
உனது பாஷைதேவ பாஷையாய் இருக்கிறது .
உனக்கு பசித்தால் அழ மட்டுந்தான் தெரியும்!
ஆனால் பிறரை அழ வைக்கஎங்களுக்கு மட்டுமே தெரியும்!!
உனது மொழிஇலக்கணம் இல்லா சங்கீதம்!
இனிமை நிறைந்த புது வேதம்!
நீ ஏழையாய் இருந்தாலும்உன் சிரிப்புஏழுலகையும் விலை பேசும்!
தெய்வ குழந்தையே நீ
தீவிரவாதியின் வீட்டில் பிறந்து
தீர்த்திடு அவரின் வன்மத்தை!
அரசியல் வாதிக்கு பிறந்து
அன்பு மழலை பேசி
உன் பிஞ்சு பாதத்தை கொஞ்சிடகொடுத்து விடு!அப்போதாவது அவர்கள்சுயநலம் விடுத்துபொது நலம் புகுந்திடட்டும்!!
கலப்படக்காரனுக்கு வாரிசாய் வந்துஅவன் நெஞ்சில் கருணை பிறந்திட ஆணையிடு!!உன்னால்தான் முடியும்ஏனென்றால்
நீதெய்வத்திற்கு இணையன்றோ?உனது பாஷையும் தேவ பஷையன்றோ?தெய்வமே படட்டும் எங்கள்மீதுஉனது மூச்சுக்காற்று!
அமைதிப் பூங்காவாய்இந்த பூமியைக் கொஞ்சம் மாற்று!!
-மாரிமுத்து, அரியலூர்.

m

நதிகளை இணைப்போம்!

நதிகளை
இணைப்பதா?
வேண்டாமா?-என்று
நாலு கட்சிகளுக்கும்
கருத்து வேறுபாடு!
கிருஷ்னாவிலும்
துங்கபத்திராவிலும்
தண்ணீர் வெள்ளம் !-எம்
ஆந்திர கன்னட மக்களுக்கோ
கண்ணீர் வெள்ளம் !
ஒருமித்த இந்தியாவில்
ஓடும் நதிகளை எல்லாம்
ஒன்றாய் இணைத்தாலே
பஞ்சமும் பசியும் நீங்கி
பாரினில் சிறப்பை பெறலாமே!