வியாழன், 23 செப்டம்பர், 2010

அன்புபாலம் மாத இதழ்


பாலம் அமைப்பின் குரலாய் வருகிறது !

அன்பு பாலம் ,
எண் ;1 ; 4 வது பிரதானசாலை ,
கஸ்தூரிபா நகர் ,அடையாறு, சென்னை -20
தொலை பேசி 044 -24402524
கைபேசி 9840218847

ஆசிரியர்; சாஹித்த்ய அகதமி விருது பெற்ற ;ஜெயகாந்தன்

"பாலம்" கல்யாணசுந்தரம் அய்யா - சில குறிப்புக்கள்!"பாலம்" கல்யாணசுந்தரம் அய்யா - சில குறிப்புக்கள்!

ஒவ்வொருவருக்கும் பணம் மூன்று வழிகளில் மட்டுமே கிடைக்கும் . சுய உழைப்பு, மூதாதையர் இடமிருந்து வருவது ,பிறர் கொடுப்பது -என்ற இந்த மூன்று வழிகளிலும் வந்த பணத்தை அய்யா அவர்கள் எப்படி பயன் படுத்தினார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்!

ஒரு கல்லூரியில் மாத சம்பளம் இருபதாயிரம் பெற்றுக்கொண்டு முப்பத்தைந்து ஆண்டுகள் பணிபுரிந்த போதிலும் அனைத்தையும் ஏழை மக்களுக்காய் செலவிட்டு தமது சொந்த செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தார்! .இவ்வாறு முப்பத்து ஐந்து ஆண்டு கால சம்பளம் -முப்பது லட்ச ரூபாய் முழுவதையுமே ஏழைகளுக்கு கொடுத்து வரலாறு படைத்தார்!

உலகில் எந்த நாட்டை சேர்ந்த்த அரசு ஊழியர்களோ தனியார் நிறுவன ஊழியர்களோ இவ்வாறு செய்தது இல்லை என்பதால் ,அமெரிக்காவில்" ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர் " என்ற விருதுக்கு தேர்ந்து எடுக்க பட்டு 6 .5 மில்லியன் டாலர் பரிசாக பெற்றார்! (முப்பது கோடி ரூபாய் ) அந்த பணம் முழுவதையும் ஏழை குழந்தைகளுக்கே வழங்கினார்!

தன்னுடைய பங்காக குடும்பத்திலிருந்து கிடைத்த சொத்து ஐம்பது லட்ச ரூபாயையும் ஏழை மக்களுக்கு அளித்து விட்டார்!

ஏழைகளின் துயரை நேரிடையாக அறிந்து கொள்ள ஏழு ஆண்டுகள் நடைபாதை வாசியாகவே வாழ்ந்த்தார்!

இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தம் உடல் உறுப்புக்களை தானமாக மருத்துவ கல்லூரிக்கு எழுதி வைத்து விட்டார்!

வாழ் நாள் முழுவதும் ஒரு செண்டு நிலமோ ,ஓலை குடிசையோ ,ஒரு சல்லி காசோ வைத்து கொள்ளாமல் தனது திருமண வாழ்க்கையை யும் தியாகம் செய்தவர் !

ஐந்தாவது ஊதிய குழுவின் விடுபட்ட ஊதியத்தையும் (ரூபாய் பத்து லட்சத்தை) ஏழைகளுக்கு அளித்தார்!

ஆறாவது ஊதிய குழுவின் ஐந்து லட்சத்தை ஏழை குழந்தைகளை கல்விக்காக எழுதி வைத்துவிட்டார்

கோடிக்கணக்கில் அள்ளி கொடுத்த இவர் ஏழைகளுக்கு கிட்டாத உணவையோ -உடைகளையோ -இருப்பிடத்தயோ விரும்புவதில்லை எனபது குறிப்பிட தக்கது!

அய்யாவின் கொள்கைகள்!

என்றும் இன்பமுடன் இனிது வாழ எதன் மீதும் பேராசை கொள்ளது இருப்போம்! பத்தில் ஒன்றை தானம் செய்வோம் !தினமும் ஒரு உயிருக்கு நன்மை செய்வோம்!

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

கவியரசே! நீ வாழ்க!


கண்ணதாசன் !

இந்தப்பெயரை ஒலிக்கும்

உதடுகளே

கவிதைகள் ஆகிவிடும்.

கொஞ்ச நாட்களே ஆண்டாலும்
உனது கவி ஆளுமையால்
திரையுலகம் நிமிர்ந்து நின்றது !

உனது வரிகளை உச்சரித்து
பாடகர்கள் உயர்ந்து நின்றார்கள்!

மெட்டமைத்த இசைவாணர்
தொட்டு நின்றார் சிகரங்களை !

சிற்றின்பவாசல்களை தேடி ,பிறகு
ஆன்மிக உலகில் அமர்ந்து விட்ட கவியரசன் நீ!
க‌விதையின்

காட்டாறுக‌ளையெல்லாம்

த‌ட‌ம்புர‌ட்டிக்கொண்டு வ‌ந்து

அழ‌கு காதல் உண‌ர்ச்சி எனும்

தேனாறுக‌ளையெல்லாம்

குடித்து தீர்த்துவிட்டு

காலிக்கிண்ண‌த்தை

அதாவ‌து இந்த‌ உல‌க‌த்தை

வீசியெறிந்து விட்டுப்

போய்விட்டாய் !

அந்த‌க் கிண்ண‌த்தை மொய்த்த‌

எறும்புக்கூட்ட‌ங்க‌ளே

இன்று வ‌ரை

க‌விஞ‌ர்க‌ள் என்று

ஊர்ந்து கொண்டிருக்கின்ற‌ன‌.

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!


அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

காக்கை உருக்கொண்டு ,
கமண்டலத்தை கவிழ்த்து விட்டு
காவிரியை தந்த கணபதியே! -இன்று
மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் என்று
அணை கட்டி தடுத்து விட்டார் அண்டை மாநிலத்தார் !
தமிழ் மாந்தர் தாகம் தீர்த்து வைக்க-
இன்னொருமுறை இங்கு வந்து
எதாவது செய்து தண்ணீர் பஞ்சம் போக்கு!
எங்கள் தமிழ் நாட்டை நோக்கு!