செவ்வாய், 6 அக்டோபர், 2009

நதிகளை இணைப்போம்!

நதிகளை
இணைப்பதா?
வேண்டாமா?-என்று
நாலு கட்சிகளுக்கும்
கருத்து வேறுபாடு!
கிருஷ்னாவிலும்
துங்கபத்திராவிலும்
தண்ணீர் வெள்ளம் !-எம்
ஆந்திர கன்னட மக்களுக்கோ
கண்ணீர் வெள்ளம் !
ஒருமித்த இந்தியாவில்
ஓடும் நதிகளை எல்லாம்
ஒன்றாய் இணைத்தாலே
பஞ்சமும் பசியும் நீங்கி
பாரினில் சிறப்பை பெறலாமே!

1 கருத்து:

Chittoor Murugesan சொன்னது…

இந்திய நதிகளை இணைப்பதே முக்கிய நோக்கமாய் ஒரு செயல் திட்டம் வகுத்து ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருக்கேன்.

ஆ.இ.2000 ன் சுருக்கம் கீழே:
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்
சபா நாயகர் பிரதமர் பதவிக்கான போட்டியில இல்லை.அவருக்கு என்னாத்த அக்கறை இருக்கும்னு சி.எம்.செல்லுக்கே ஆன்லைன்ல புகார் கூட அனுப்பியாச்சு. ஒரு புண்ணியமும் இல்லை