வியாழன், 22 ஏப்ரல், 2010

சானியா மாலிக்

சானியா மாலிக் (கவிதை! )

என்ன தவறு செய்தது இந்த பெண் ?
அண்டை நாட்டு ஆடவனை மணந்தால்
இவர்களுக்கு ஏன் எரிச்சல் வருகிறது?
இருவரின் மனமும் ,மதமும் ஒன்றானபின்
இவர்கள் எதற்கு குறுக்கே?
ஊடகங்கள் சிலநாட்களாய் இவர்களை
சுற்றியே வந்ததும் ,
சுற்றி வந்து இவர்களை மென்றதும்
கொடுமையிலும் கொடுமை !
ஆடுகளத்தில் வெற்றிகளை கொணர்ந்து
நாட்டுக்கு அர்பணித்த அம்மங்கை
நாடுகடத்த பட வேண்டுமாம்! -எல்லை தாண்டிய
தீவிரவாத தீயினால் கருகிய -இரு நாட்டின்
அமைதியும், நட்பும்,
மாலிக் சானியாவை மணந்த பின்னே
மண்ணில் மறுபடியும் துளிர் விடாதா?
இன்னல் பல கடந்து -இல் வாழ்வில்
இணைந்திட்ட
வெற்றி மகள் சானியாவை
வாஞ்சையுடன் வாழ்த்திடுவோம்!


அரியலூர் மாரி .

கருத்துகள் இல்லை: