வியாழன், 22 ஏப்ரல், 2010

முடிவில்லா முற்று புள்ளி.


வணிகம் செய்ய இங்கே வந்தவன் ,
அரசியலுள் புகுந்தான் !-நம்மை ஆண்டான் !
நாற்பத்து ஏழில் அவனிடமிருந்து மீண்டோம்!
அடிமை தளைகள் அகன்றாலும் ,
இன -சாதி சமய தளைகள்
இன்னும் அகலவில்லை!
தீவிரவாத பேய்களும் தேடி நிதம் அலைகின்றன!
வாக்குகளுக்கு விலை கொடுத்து
அரசியலை வியாபாரமாக்கி விட்டனர்
நம் அரசியல் வாதிகள்!
முகவரிகளை தொலைத்து விட்டு
முடிவில்லா முற்று புள்ளியானது ஜனநாயகம்!

கருத்துகள் இல்லை: