வியாழன், 23 செப்டம்பர், 2010

"பாலம்" கல்யாணசுந்தரம் அய்யா - சில குறிப்புக்கள்!



"பாலம்" கல்யாணசுந்தரம் அய்யா - சில குறிப்புக்கள்!

ஒவ்வொருவருக்கும் பணம் மூன்று வழிகளில் மட்டுமே கிடைக்கும் . சுய உழைப்பு, மூதாதையர் இடமிருந்து வருவது ,பிறர் கொடுப்பது -என்ற இந்த மூன்று வழிகளிலும் வந்த பணத்தை அய்யா அவர்கள் எப்படி பயன் படுத்தினார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்!

ஒரு கல்லூரியில் மாத சம்பளம் இருபதாயிரம் பெற்றுக்கொண்டு முப்பத்தைந்து ஆண்டுகள் பணிபுரிந்த போதிலும் அனைத்தையும் ஏழை மக்களுக்காய் செலவிட்டு தமது சொந்த செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தார்! .இவ்வாறு முப்பத்து ஐந்து ஆண்டு கால சம்பளம் -முப்பது லட்ச ரூபாய் முழுவதையுமே ஏழைகளுக்கு கொடுத்து வரலாறு படைத்தார்!

உலகில் எந்த நாட்டை சேர்ந்த்த அரசு ஊழியர்களோ தனியார் நிறுவன ஊழியர்களோ இவ்வாறு செய்தது இல்லை என்பதால் ,அமெரிக்காவில்" ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர் " என்ற விருதுக்கு தேர்ந்து எடுக்க பட்டு 6 .5 மில்லியன் டாலர் பரிசாக பெற்றார்! (முப்பது கோடி ரூபாய் ) அந்த பணம் முழுவதையும் ஏழை குழந்தைகளுக்கே வழங்கினார்!

தன்னுடைய பங்காக குடும்பத்திலிருந்து கிடைத்த சொத்து ஐம்பது லட்ச ரூபாயையும் ஏழை மக்களுக்கு அளித்து விட்டார்!

ஏழைகளின் துயரை நேரிடையாக அறிந்து கொள்ள ஏழு ஆண்டுகள் நடைபாதை வாசியாகவே வாழ்ந்த்தார்!

இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தம் உடல் உறுப்புக்களை தானமாக மருத்துவ கல்லூரிக்கு எழுதி வைத்து விட்டார்!

வாழ் நாள் முழுவதும் ஒரு செண்டு நிலமோ ,ஓலை குடிசையோ ,ஒரு சல்லி காசோ வைத்து கொள்ளாமல் தனது திருமண வாழ்க்கையை யும் தியாகம் செய்தவர் !

ஐந்தாவது ஊதிய குழுவின் விடுபட்ட ஊதியத்தையும் (ரூபாய் பத்து லட்சத்தை) ஏழைகளுக்கு அளித்தார்!

ஆறாவது ஊதிய குழுவின் ஐந்து லட்சத்தை ஏழை குழந்தைகளை கல்விக்காக எழுதி வைத்துவிட்டார்

கோடிக்கணக்கில் அள்ளி கொடுத்த இவர் ஏழைகளுக்கு கிட்டாத உணவையோ -உடைகளையோ -இருப்பிடத்தயோ விரும்புவதில்லை எனபது குறிப்பிட தக்கது!

அய்யாவின் கொள்கைகள்!

என்றும் இன்பமுடன் இனிது வாழ எதன் மீதும் பேராசை கொள்ளது இருப்போம்! பத்தில் ஒன்றை தானம் செய்வோம் !தினமும் ஒரு உயிருக்கு நன்மை செய்வோம்!

4 கருத்துகள்:

Try 🆕 சொன்னது…

இப்படிப்பட்ட மனிதரை எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை .வாழ்த்தவதா அவரை வணங்கத்தான் செய்வேண்டும்.

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் சொன்னது…

இதுபோன்ற மனிதரைக் காட்டிலும் உயர்ந்தவர் வேறொருவர் இருப்பரோ' எனும் ஒரு பிரம்மிப்பு ஏற்படுகிறது. இத்தனைப் பெரிய மனதுள்ள ஒரு மனிதர் இருப்பதை எண்ணித்தான் மழை கூட பொழிகிறதுபோல். வாழ்வின் பேரானந்தம் ஒன்று இருக்குமெனில் இதுபோன்ற மனிதர் ஒருவரை காணும் தருனமாகவே இருக்கும். இறையருள் அவருக்கு மேலும் நிறையட்டும்..

குறிப்பாக அவர் குறிப்பிடும் லட்சியமேனும் நாம் கவனத்தில் கொள்ளத் தக்கது:-

//என்றும் இன்பமுடன் இனிது வாழ எதன் மீதும் பேராசை கொள்ளாது இருப்போம்!

பத்தில் ஒன்றையேனும் தானம் செய்வோம்!

தினமும் ஒரு உயிருக்கேனும் நன்மை செய்வோம்!!

எனும் கருத்து நிறைந்த இத்தகைய உயர்ந்த ஒரு மனிதரை அறியத் தந்தமைக்கு பெருநன்றிகளும் வணக்கமும்!!

வித்யாசாகர்

Unknown சொன்னது…

நன்றிகள் நண்பரே!

marimuthu சொன்னது…

நன்றிகள் நண்பரே!